தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்! முன்னணி பிராண்டுகளின் அதிரடி ஆபர்
கோவையின் நம்பர் ஒன் நாளிதழான தினமலர் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து நடத்தும், ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட மக்களின் தேடலை அறிந்து, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி மற்றும் பில்டு, ஆட்டோ மொபைல் கண்காட்சி மற்றும் உணவுத்திருவிழா ஆகியவை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குட்டீஸ், இல்லத்தரசிகள், இளம்பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும், குடும்பத்தோடு வந்திருந்து, தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்வமுடன் தேடி, பர்ச்சேஸ் செய்துச் செல்கின்றனர். வருகிற 18 ம் தேதி வரை நடக்கும் இந்த ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.