உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 1760 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | district athletic tournament| covai

1760 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | district athletic tournament| covai

1760 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| district athletic tournament| covai கோவை நேரு ஸ்டேடியத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது . மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளி சார்பில் நடக்கும் இப்போட்டியில், 1,760 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான400 மீ., ஓட்டத்தில் சாலினி, சுசித்ரா, தர்ஷினி ஆகியோரும், 1500 மீ., ஓட்டத்தில் ரமிதா, ஜெரால்டின் சானா, ஏன்லின் லிரிண்டா ஆகியோரும், நீளம் தாண்டுதலில் ஜோகிதா, சஷ்திகா, அதினா ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். உயரம் தாண்டுதலில் பரணி, அபிநயா, மதுஸ்ரீ ஆகியோரும், மும்முறை தாண்டுதலில் தக்சின்யா, பிரின்சி ஜாய், சஜிதா ஆகியோரும், வட்டு எறிதலில் ஜெனிபர், நெகரிகா, ரூபி ஆகியோரும் வெற்றி பெற்றனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான 1,500 மீ., ஓட்டத்தில் ஹன்சினி, கமலி, சம்யுக்தா ஆகியோர் முதல் மூன்று இடங்களை தட்டிச் சென்றனர். அதேபோல், 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவு வட்டு எறிதலில் விஸ்வபாரதி, நிர்மல், விமல்குமார் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோருக்கான, 1,500 மீ., ஓட்டத்தில் பிரதேந்தர், கிஷோர் குமார், கவின் ஆகியோரும் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

அக் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை