முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்கள் அசத்தல் | Coimbatore | District Athletics Tournament
கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 6 வது ஜூனியர் மற்றும் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. போட்டியை ரோட்டரி மாவட்ட கவர்னர் சுந்தரவடிவேல் துவக்கி வைத்தார். வீரர் வீராங்கனையினருக்கு பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டி முடிவுகள்: ஓபன் ஆணகள் பிரிவு, ஹேமர் எறிதலில் முகேஷ் குமார், ஆமோஸ், பிரதீஷ் கண்ணா; வட்டு எறிதலில், விஷ்ணு பிரசாத், வெங்கட் பாலாஜி, மாரி செல்வம்; 400மீட்டர், ஓட்டத்தில் ரோகித், ஜெய் விக்னேஷ், மலரவன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். ஓபன் பெண்கள் பிரிவு, 1500 மீட்டர், ஓட்டத்தில் நந்தினி, கமலி, மங்கையர்கரசி; ஹேமர் எறிதலில் நித்யா, வினோதினி, மீனா; 400மீ., ஓட்டத்தில் எப்சிபா, ஸ்ரேயா, மேனகா; வட்டு எறிதலில் சர்மிளா, ஸ்ரீலயா, ஸ்ரீநிதி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.