உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் அணி அபாரம்| District cricket tournament| covai

ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் அணி அபாரம்| District cricket tournament| covai

ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் அணி அபாரம்| District cricket tournament| covai கூட்டுறவின் தந்தை ராமலிங்கம் செட்டியார் நினைவாக கடந்த 29 வருடங்களாக மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கோவை ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று துவங்கியது. போட்டிகளை பள்ளியின் செயலரும், கிரிக்கெட் கமிட்டியின் தலைவருமான ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். இன்று நடந்த முதல் போட்டியில் ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி அணி மற்றும் st.தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணி விளையாடினர். இதில் ஆர்.கே.ஸ்ரீரங்கம்மாள் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் st.தாமஸ் பள்ளி அணியை வென்றது. அடுத்தடுத்த போட்டிகள் நாளை நடைபெறும் மாணவிகளுக்கான போட்டிகள் வரும் வியாழக்கிழமை துவங்க உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

டிச 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை