1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| District level athlete tournament| covai
1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| District level athlete tournament| covai கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 66வது குடியரசு தின விழா போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை துவங்கியது . மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலை பள்ளி சார்பில் நடத்தப்படும் இந்த தடகள போட்டிகளை பள்ளி முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துவக்கி வைத்தார். பள்ளி கல்வித்துறை உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 400 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மொத்தம் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். முதல் நாள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மகாஜன பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பரிசு வழங்கினார். போட்டிகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜெயபாண்டியன் ஒருங்கிணைத்தார். போட்டிகள் தொடர்ந்து நடைபெறும்.