நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடக்கும் போட்டி | Coimbatore | District level Basketball match
கோவையில் ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு 3 ம் ஆண்டு ஸ்ரீ நவக்கொடி நினைவு கோப்பைக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது. மாணவ மாணவியருக்கு 13 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நாக் அவுட் மற்றும் லீக் அடிப்படையில் நடைபெற்ற போட்டியில் 52 அணிகள் பங்கேற்றன. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஒய்.எம்.சி.ஏ., அணி 68 - 34 என்ற புள்ளிக்கணக்கில் எங் பிளட் அணியை வீழ்த்தியது. ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி 80 - 13 என்ற புள்ளிக் கணக்கில் சுகுணா பிப்ஸ் அணியை வீழ்த்தியது. 13 வயது மாணவியர் பிரிவில், அல்வெர்னியா அணி 46 - 7 என்ற புள்ளிக் கணக்கில் யுனிடேட் அணியை வீழ்த்தியது, எஸ்.வி.ஜி.வி., அணி 42 - 28 என்ற புள்ளிக் கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியை வீழ்த்தியது. 16 வயது மாணவர்கள் பிரிவில் ஆர்.எல்.எம்.எச்.எஸ்.ஏ., அணி 71 - 28 என்ற புள்ளிக் கணக்கில் பாரதி மெட்ரிக் பள்ளியை வீழ்த்தியது. சப் - அர்பன் அணி 85 - 44 என்ற புள்ளிக் கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியை வீழ்த்தியது. 16 வயது மாணவியர் பிரிவில், அல்வேர்ணியா ஏ., அணி 41 - 40 என்ற புள்ளிக்கணக்கில் யுனிடேட் அணியை வீழ்த்தியது. பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணி 56 - 42 என்ற புள்ளிக் கணக்கில் பாரதி. அணியை வீழ்த்தியது.