உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இசையால் வசமாக இதயம் எது? | Divine journey of the Musical family | Udumalpet

இசையால் வசமாக இதயம் எது? | Divine journey of the Musical family | Udumalpet

திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி. புரத்தை சேர்ந்தவர் கண்ணப்பன். குரலிசை, பாடலாசிரியர், புல்லாங்குழல் வாசிக்கும் திறன் படைத்த இசைக் கலைஞர். இவரது மகள் மஹதி. ப்ளஸ் 2 படிக்கிறார். இளைய மகன் வசீகரன். பத்தம் வகுப்பு படிக்கிறார். சிறு வயது முதலே தந்தை மூலம் இசையால் ஈர்க்கப்பட்ட மஹதி, வசீகரனுக்கு முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கண்ணப்பன் சிறந்த குருவை வைத்து கற்றுக் கொடுத்தார். தற்போது மஹதி புல்லாங்குழல் இசை கலைஞராகவும், வசீகரன் மிருதங்க கலைஞராகவும் இசை வானில் பீடு நடை போட்டு வருகின்றனர். குறுகிய காலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் இசை கச்சேரி நடத்தி இசை பிரியர்களுக்கு மஹதியும், வசீகரனும் செவி விருந்து படைத்து வருகின்றனர். சகோதரியின் புல்லாங்குழல், சகோதரனின் மிருதங்கம் இசை தத்ரூபமாகவும், நேர்த்தியாகவும் இருப்பதை பார்த்து ஏராளமானோர் முன் கூட்டியே இசை கச்சேரி நடத்த புக்கிங் செய்து வருகின்றனர். அண்ணாமலை பல்கலையில் மஹதி புல்லாங்குழல் வகுப்பில் எட்டு வரை முடித்துள்ளார். குழந்தைகளுக்கு புல்லாங்குழல் வாசிக்க கற்றுக் கொடுத்து வருகிறார். புல்லாங்குழல் வாசிப்பதால் மனம், எண்ணம், உடல் துாய்மையாக இருப்பதாகவும், மிருதங்கம் இசைப்பதால் நாடி நரம்புகள் சுறுசுறுப்பாகவும், மூளைக்கு புது தெம்பு கிடைப்பதாகவும் மஹதி, வசீகரன் பெருமிதத்துடன் கூறுகின்றனர். இசை விருந்து படைத்து விருதுகளை குவித்து வரும் அன்பு குழந்தைகளின் தெய்வீக இசைப் பயணம் தங்கு தடையின்றி பீடு நடை போட அவரது தாயார் பத்மாவதி மற்றும் தந்தை கண்ணப்பன் உற்சாகப்படுத்தி ஊக்கமளித்து வருவது போற்றுதலுக்குரியது.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ