/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 5லிருந்து 14 சதவீதமாக விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு! என்ன காரணம்?
5லிருந்து 14 சதவீதமாக விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு! என்ன காரணம்?
முன்பெல்லாம் சிவில், கிரிமினல் வழக்குகள் தான் கோர்ட்டுக்கு அதிகம் வரும். ஆனால் இப்போது அதையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு விவாகரத்து வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதற்கென்று தனி கோர்ட்டுகள் வந்து விட்டன. வெளிநாடுகளில் உள்ள விவாகரத்து வழக்கிற்கும், இந்தியாவில் உள்ள விவாகரத்து வழக்கிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மேற்கத்திய நாடுகளில் திருமணம் என்பது காண்டிராக்டு போன்றது. சொத்தில் பாதியை பிரித்து கொடுத்து விட்டால் விவாகரத்து கிடைத்து விடும். அதற்கு எந்த காரணமும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவில் காரணம் இல்லாமல் விவாகரத்து வாங்க முடியாது. விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணம் என்ன? அதை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 25, 2024