உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திமுகவினருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஜால்ரா | DMK Attacked teachers

திமுகவினருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஜால்ரா | DMK Attacked teachers

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா ஹட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ஞாயிறு விடுமுறையன்று பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி, மேலாண்மை குழு தலைவி ராஜாமணி, முன்னாள் மேலாண்மை குழு தலைவி பத்மினி, தற்காலிக ஆசிரியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடு, வீடாக சென்று மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்த தி.மு.க. கவுன்சிலர் ஆலன், கவுன்சிலர் புவனேஸ்வரியின் ன் கணவர் செல்வராஜ் உள்ளிட்ட தி.மு.க.வினர் பள்ளி நிர்வாகத்தினர் அ.தி.மு.க.விற்கு ஓட்டு கேட்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர் சேர்க்கை மட்டுமே ஈடுபடுகிறோம், என்று கூறி அப்பகுதியில் விசாரிக்கவும் வலியுறுத்தினார்கள். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில் தி.மு.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் ஆசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவரை தாக்கினர். இதில் காயமடைந்த ஆசிரியர் பந்தலூர் அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் சங்க ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் பெற்றோர்கள் தேவாலா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வந்தனர். அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் பெற்றோர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளான இரண்டு பெண்களிடம் மட்டும் விசாரணை மேற்கொண்டார். உரிய அனுமதி பெறாமல் பள்ளி மாணவர் சேர்க்கை பணியில் ஈடுபட்டது தவறு என கூறி திமுகவினரின் அராஜகத்திற்கு ஆதரவாக பேசினார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த பெற்றோர்கள் அங்கிருந்து வெளியேறி அரசு பள்ளியில் படிக்கும் தங்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் தலைமை ஆசிரியர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி விடுமுறை நாளில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை குழு நிர்வாகிகள் மீது தி.மு.க.வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பந்தலுார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஏப் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !