உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகளம் காணும் சண்டக்கோழிகள் | Sandakozhi

பொங்கல் பண்டிகையையொட்டி ஆடுகளம் காணும் சண்டக்கோழிகள் | Sandakozhi

தமிழக பாரம்பரிய போட்டிகளான ஜல்லிக்கட்டு, கிடா முட்டு வரிசையில் சண்டக்கோழி பந்தயம் தனி முத்திரை பதித்து வருகிறது. சேவல் சண்டையானது, சேவல்கட்டு, கோட்சை, வெப்போர், வெற்றுக்கால் சண்டை, கட்டு சேவல் சண்டை என ஒவ்வொறு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதிகளை பின்பற்றி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் சேவல் சண்டை இல்லாமல் காணும் பொங்கல் கிடையாது எனலாம். அந்தளவிற்கு இன்றளவும் சேவல் சண்டை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை பொங்கல் பண்டிகைக்கு 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தயார் படுத்துவர். காளைக்கு நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண் குத்தும் பயிற்சி என பலகட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவது போல் சேவல்களுக்கும் மோதல் பயிற்சி, முடியை சிலிர்க்க விடும் பயிற்சி, நீச்சல் மற்றும் பாய்ச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. போட்டியில் வெற்றி பெறும் சேவல்களின் உரிமையாளர்களுக்கு ஆடுகளத்திலேயே ரொக்கப்பரிசுகள் அள்ளித்தரப்படும்.

ஜன 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ