சிறந்த வீரரர், சிறந்த கோல்கீப்பர் தேர்வு|Footboll Tornament
அண்ணா பல்கலை கோவை மண்டல வளாகத்தின் உடற்கல்வித்துறை சார்பாக கல்லுாரிகளுக்கு இடையேயான இன்விடேஷனல் ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணிகள் மோதின. சிறப்பாக விளையாடிய கற்பகம் பல்கலை அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணா கல்லுாரி அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது.
ஜன 07, 2024