2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு | Pollachi | trafic jam
பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சின்னம்பாளையம் மாக்கினாம்பட்டி, சோலபாளையம் ஊஞ்சவாலாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 25,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வழித்தடத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் சென்டர் மீடியன்களை அமைத்து தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகனங்கள், மாணவ மாணவிகள் 2 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்டர் மீடியங்களை அகற்றக் கோரி உடுமலை சின்னம்பாளையத்தில் 4 ஊராட்சித் தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜன 08, 2024