உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி | Coimbatore | Cricket Match

ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி | Coimbatore | Cricket Match

ராமலிங்கம் செட்டியார் பள்ளி சார்பில் 27 ம் ஆண்டு ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெறுகிறது. இதில் 16 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் சுற்றுப்போட்டியில் ராமலிங்கம் செட்டியார் பள்ளி மற்றும் அங்கப்பா பள்ளி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்தி ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் ரஞ்சித் குமார் 84 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். கோகுல கண்ணன் 53 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்தார். அங்கப்பா பள்ளியின் கிருத்திக் மூன்று விக்கெட் கைப்பற்றினார். அடுத்து விளையாடிய அங்கப்பா பள்ளி அணி 13.1 ஓவர்களில் 28 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ராமலிங்கம் செட்டியார் அணியினர் பிரணவ் நான்கு விக்கெட் மற்றும் பிரணேஷ் மூன்று விக்கெட் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

ஜன 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ