கோவையில் தினமலர் வழிகாட்டி! கல்லுாரி படிப்பில் தீர்ந்தது குழப்பம்... மாணவர்கள் மகிழ்ச்சி
தினமலர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமங்கள் இணைந்து நடத்தும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் 23ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. பிளஸ் 2 படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம், எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற கேள்விகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கண்காட்சி மற்றும் கருத்தரங்கு என்ற இரு பிரிவுகளாக நிகழ்ச்சி நடக்கிறது. 130 முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வந்த மாணவ-மாணவியர்கள் அந்த ஸ்டால்களுக்கு சென்று கல்லுாரி படிப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். மேலும் கருத்தரங்கில் பேசியவர்களின் ஆலோசனைகளும் அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பத்துக்கு விடை அளிப்பதாக இருந்தது. கோவையில் நடைபெற்று வரும் தினமலர் வழிகாட்டி 2ம் நாள் நிகழ்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.