தினமும் 80,000 லிட்டர் குடிநீர் சப்ளை | Drinking water supply
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் குடிநீர் கிணறுகள் வற்றி தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நெல்லியாளம் நகராட்சி மூலம் மூன்று வாகனங்களில் தினமும் சுழற்சி முறையில் தினமும் 80 ஆயிரம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயிலை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்வது மக்களிடைய வரவேற்பை பெற்றுள்ளது.
மார் 28, 2024