லாரியில் சர்க்கரை மூட்டைகளுக்குள் புகையிலை மூட்டைகள் பதுக்கி கடத்தல் | Drug trafficking
நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கர்நாடகாவில் இருந்து லாரி மூலம் கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழக - கர்நாடக எல்லையான முதுமலை காக்கநல்லா சோதனை சாவடியில் எஸ்.ஐ. கண்ணன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கர்நாடகாவில் இருந்து வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் சர்க்கரை மூட்டைகளுக்கு நடுவே 240 மூட்டை புகையிலை பொருட்களை பதுக்கி கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கேரள மாநிலம் பாலக்காடு கோர்கோழி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கைது செய்யப்பட்டார். 26 லட்சத்து 54 ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை கூடலூர் டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி ஆகியோர் பறிமுதல் செய்தனர். விசாரணை நடக்கிறது.