கோவையில் போதை மாத்திரைகள் புழக்கம்... தொடரும் சிக்கல்கள்! திணறும் போலீசார்!
கோவையில் சமீப காலமாக போதைக்காக உடல் வலி மாத்திரைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் என்.டி.பி.எஸ். என்ற போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் குறிப்பிட்டுள்ள அட்டவணையில் எவை எவை போதை பொருட்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த அட்டவணையில் உள்ள போதை பொருட்களை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் கோவையில் சமீப காலமாக அந்த அட்டவணையில் இல்லாத உடல்வலி மாத்திரைகள் போதைக்காக விற்கப்படுகின்றன. அவற்றை விற்றவர்களை கைது செய்யும் போது அந்த உடல் வலி மாத்திரைகள் மத்திய அரசின் போதை பொருட்கள் அட்டவணையில் இடம் பெறவில்லை என்று காரணம் கூறி சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய முடிவதில்லை. எனவே கோவையில், போதைக்காக பயன்படுத்தப்படும் உடல் வலி மாத்திரைகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றை பறிமுதல் செய்து வழக்கு போடுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களினால் போலீசார் திணறி வருகிறார்கள் என்பது தான் உண்மை நிலை. இதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.