உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திருக்கார்த்திகை பண்டிகைக்கு மண் அகல் விளக்குகள் பயன்படுத்த வலியுறுத்தல்

திருக்கார்த்திகை பண்டிகைக்கு மண் அகல் விளக்குகள் பயன்படுத்த வலியுறுத்தல்

திருக்கார்த்திகை பண்டிகைக்கு மண் அகல் விளக்குகள் பயன்படுத்த வலியுறுத்தல் | Rain - Affected earthen lamp production | Udumalai திருப்பூர் மாவட்டம் உடுமலை புக்குளம், பூளவாடி, ஜல்லிபட்டி, சாளையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பாரம்பரியமாக அகல் விளக்கு மற்றும் மண் பாண்டம் உற்பத்தியில் 25க்கும் அதிகமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் விற்பனையால் கிடைக்கும் சொற்ப வருவாய் தொழிலாளர்களின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இந்த சீசனை இலக்காக வைத்து முன்னதாகவே உற்பத்தியை துவக்குவது வழக்கம். இந்தாண்டு உற்பத்திக்கு தேவையான குளத்து மண் குறித்த நேரத்தில் கிடைக்கவில்லை. எனவே, கார்த்திகை தீப திருவிழாவுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் மண் தட்டுப்பாடு ஏற்பட்டது. தனியாரிடம் அதிக விலைக்கு மண் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும் உற்பத்தியை துவங்கியபோது மழை பெய்யத் துவங்கியது. இதனால் அகல் விளக்குகளை காய வைத்து விற்பனைக்கு தயார்படுத்துவது தாமதமானது. இப்படி பல்வேறு இன்னல்களை சந்தித்து உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை பெரும்பாலானோர் வாங்குவதில்லை. சீனா பீங்கான் விளக்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதால் பாரம்பரிய மண் அகல் விளக்கு தொழிலில் ஈடுபட்டுவோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல போராட்டங்களுக்கு இடையே குடும்பத்தினர் அனைவரும் ஈடுபட்டு தயாரிக்கும் அகல் விளக்கு விற்பனையிலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பல குடும்பத்தினர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். சொற்ப அளவில் இருக்கும் தொழிலாளர்கள் மண் அகல் விளக்கு மற்றும் மண் பாண்டம் உற்பத்தி செய்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். நீர்நிலைகளில் டிப்பர் லாரிகளில் இலவசமாக மண் அள்ளி செல்கின்றனர். ஆனால் மண் பாண்டம் தயாரிப்பாளர்கள் மண் அள்ள அரசு அதிகாரிகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். எவ்வித கட்டுப்பாடும் இன்றி மண் அள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும். கைவினை பொருட்கள் விற்பனை நிலையங்களில் மானிய விலையில் மண் பாண்ட பொருட்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். பல்வேறு சிரமங்களை கடந்து தயாரிக்கும் மண் அகல் விளக்குகளை திருக்கார்த்திகை பண்டியையொட்டி மக்கள் பெருமளவு வாங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டும் என வலியுறத்தினர்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !