பிரமிப்பூட்டும் கலை வடிவ விழிப்புணர்வு பிரச்சாரம் |Eat Right Campaign|Healthy Balanced Diet|covai
கோவை ப்ரோசோன் (Prozone) மாலில் ஈட் ரைட் (Eat Right) பிரச்சார தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் ஈட் ரைட் பிரமிட் (eat right pyramid), தெருக்கூத்து, நடிப்பு, பாரம்பரிய நடனம் ஆடி அசத்தினர். ஈட் ரைட், ஈட் ஃசேப், ஈட் சஸ்டைனபில் (Eat Right, Eat safe, Eat Sustainable) கருத்துக்களை முன்னிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆரோக்கிய உணவு, தரமான உணவு, ரசாயன உணவு தவிர்த்தல், சரிவிகித உணவு உட்கொள்ளும் முறை குறித்து விளக்கம் கொடுத்தனர். குழந்தைகளுக்கான உணவு விளக்க விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை உணவு பாதுகாப்பு மற்றும் ஃபுட் சைன்ஸ் ஊட்டச்சத்து துறையினர், சிம்ஸ் அறிவியல் மற்றும் வர்த்தக கல்லூரியுடன் இணைந்து செய்தனர். நிகழ்ச்சியில் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.