உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ₹2,000 லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி | Bribe | EB AE Arrested | Udumalpet

₹2,000 லஞ்சம் வாங்கி கைதான அதிகாரி | Bribe | EB AE Arrested | Udumalpet

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருக்கு சொந்தமான நிலம் உடுமலை அருகே பொட்டையம்பாளையத்தில் உள்ளது. விளை நிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு கொங்கல் உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளர் சத்தியவாணி இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத ஜெயராமன் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய இரண்டாயிரம் ரூபாயை ஜெயராமனிடம் இருந்து சத்தியவாணி வாங்கிய போது இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் சத்தியவாணியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி