எப்படி இப்படி செஞ்சாங்க... இதுக்கு என்னதான் வழி...
திருப்பூர் மாவட்டம் அவினாசி-மேட்டுப்பாளையம் இடையே சாலை விரிவாக்கப்பணிகள் நடக்கின்றன. இதற்காக அகற்றப்பட்ட மரங்கள் மறுநடவு செய்யப்பட்டன. ஆனால் அவை எல்லாம் மின்சார கம்பங்கள் அருகில் நடப்பட்டுள்ளன. இதனால் மரங்கள் வளரும் போது மீண்டும் அந்த மரங்களை வெட்ட வேண்டியிருக்கும். மேலும் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளன. உரிய பராமரிப்பு இல்லாமல் மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 08, 2025