என்ன வேணும் தின்னுங்க..! இஷ்டம் போல வெ(து)ட்டுங்க.!! | Election Fever |lok sabha election 2024
இந்த வாட்டி மூணாவது முறையா மோடியே மீண்டும் பிரதமரா வரணும்ன்னு சொல்லி பாஜ காரங்க தீவிரமா வேல செஞ்சிட்டு இருக்காங்க. 400 க்கும் மேற்பட்ட தொகுதியில வெற்றி பெறுவோம்ன்னு வேட்பாளர்களையும் தடாலடியா அறிவிச்சுட்டு இருக்காங்க. தேர்தல் களத்துல பாஜக ஜெட் வேகத்ல எறங்கி வேல பார்த்துட்டு இருக்கு. ஆனா, இண்டி கூட்டணி நாளுக்கு நாள் நொந்து போயிட்டு வர்றதா எதிர்கட்சிக்காரங்க கிளப்பி விடுறாங்க. தமிழ்நாட்ட பொறுத்தமட்டுல திமுக கூட்டணியில இடம் பெற்ற கட்சிங்க இந்த தேர்தல்யும் தொடருது. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ன்னு சொல்லுவாங்க. இந்த பழமொழி ஒபிஎஸ், இபிஎஸ்க்கு பொருத்தமா இருக்கு. நா கட்டுனா உன்னத்தான் கட்டுவேன்னு ஒபிஎஸ் ஒத்தக்கல்ல நிக்கறாப்ள. ஆனா, இந்த மாப்பிள்ளையே வேணாம்ன்னு இபிஎஸ் தரப்பு சொல்லுது. இத... இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்ன்னு திமுகவும் கூட்டணி கட்சிக்காரங்களும் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்ப வறுத்தெடுக்குது. ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சு அரசியல் ஆதாயம் தேடுறதா பாஜ மேல திமுக குத்தம் சுமத்துது. இந்த சைக்கிள் கேப்ல சிந்தன செஞ்ச குக்கர் பார்ட்டி தினகரன், ஒபிஎஸ், இபிஎஸ் ரெண்டு பேரும் ஒத்து வரமாட்டாங்கன்னு சரியா கணக்குப் போட்டு பேசாம பாஜக பக்கம் ஐக்கியமாயிட்டார். பாஜ கூட்டணிய ஆதரிச்சு தீவிரமா தேர்தல் பிரச்சாரம் செய்யவும் தயாராயிட்டு இருக்காரு. ரெட்ட இல எங்களுக்குத்தான்னு ஒபிஎஸ் தரப்பும், ரெட்ட இலய யாரும் சொந்தம் கொண்டாட முடியாதுன்னு இபிஎஸ் தரப்பும் சவால் விட்டுட்டு வர்றாங்க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்ன்னு ரெண்டு பேரும் பேசி வச்ச மாதிரி சொல்லுறாங்க. ரெட்ட இல யாரு பக்கம் சாயும்கிறது சுப்ரீம் கோர்ட் முடிவு செய்யும். நாம எலக் ஷன் வேலய பாப்போம்ன்னு ரத்தத்தின் ரத்தங்கள் களத்தில் இறங்கி ஜரூரா வேல பாத்துட்டு இருக்காங்க. ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ மதுரை உசிலம்பட்டி அய்யப்பன் ரெண்டு நாளுக்கு முன்னாடி பூத் கமிட்டி மீட்டிங் போட்டாரு. ஆம்பளயாளுக்கு சூப்பர் வேட்டி, 500 ரூபா, பொம்பளயாளுக்கு சூப்பர் சேலை, 500 ரூபா கொடுத்து குஷிப்படுத்தினாரு. 39 தொகுதிலயும் ரெட்ட இலைல போட்டி போட்டு அண்ணன் ஒபிஎஸ் வேட்பாளர்ங்க வெற்றி பெறுவாங்கன்னு போற போக்குல பத்தவச்சுட்டு போனாரு.