தாய் பாசத்தை உணரச் செய்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பந்தலூர் அருகே கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதிக்கு வந்த ஆறு யானைகள் கொண்ட கூட்டம் விவசாய தோட்டங்களில் விளைபொருள்களை சேதப்படுத்தியது. அப்போது அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் தரைதளத்தோடு ஒட்டி இருந்த கிணற்றில், தெரியாமல் குட்டி யானை ஒன்று 30 அடி ஆழ கிணற்றில் விழுந்து விட்டது. அதை மீட்க தாய் யானை போராடியது. இதற்கிடையில் வனத்துறையினரும் குட்டி யானையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். பின்னர் குட்டி யானையை அவர்கள் ஒரு வழியாக மீட்டனர். குட்டி யானையை மீட்க தாய் யானை நடத்திய பாச போராட்டத்தை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 01, 2024