/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ படுகாயம் அடைந்த வாலிபர் | Coimbatore | Elephant attacked and injured
படுகாயம் அடைந்த வாலிபர் | Coimbatore | Elephant attacked and injured
கோவை மாவட்டம் தோண்டை மலை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இரவு நண்பருடன் டூவிலரில் வீடு திரும்பினார். தோண்டை மலை வனச்சாலையில் சென்ற போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை டுவீலரில் வந்தவர்களை துரத்தியது. அப்போது டுவீலரில் பின்னால் அமர்ந்திருந்த சதீஷ்குமார் நிலை தடுமாறி கிழே விழுந்தார். அவரை விரட்டிய காட்டு யானை அவரது வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் அடைந்தார். நண்பர்கள் யானையை சப்தம் போட்டு விரட்டி விட்டு சதீஷ்குமாரை கோவை அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர். காரமடை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
ஜன 22, 2025