உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகள் தினத்தில் பேரதிர்ச்சி ரயில் மோதி தாய் யானை, குட்டி பலி | elephant day | Elephant Train crash

யானைகள் தினத்தில் பேரதிர்ச்சி ரயில் மோதி தாய் யானை, குட்டி பலி | elephant day | Elephant Train crash

யானைகள் தினத்தில் பேரதிர்ச்சி ரயில் மோதி தாய் யானை, குட்டி பலி | elephant day | Elephant Train crash | wildlife கேரளாவின் பாலக்காடு மாவட்டம், வாளையார் அருகே சாவடிப்பாரா புதுப்பதி வனப்பகுதியில் நள்ளிரவு 11.30 மணியளவில் 4 யானைகள் கொண்ட கூட்டம் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றது. அப்போது மங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த தாய் யானை மற்றும் அதன் குட்டி மீது மோதியது. ரயில் மோதிய வேகத்தில் துடிதுடித்து இறந்த இரு யானைகளின் உடல்களும் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, ரயில் என்ஜினின் அடியில் சிக்கி கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் யானைகளின் உடல்களை தண்டவாளத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து20 நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. விபத்து நடந்த பகுதி வளைவான பாதையாக இருப்பதால், தண்டவாளத்தைக் கடக்கும் யானைகளை ரயில் என்ஜின் டிரைவரால் முன்கூட்டியே கவனிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. மேலும், ரயிலின் வேகம் குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த விபத்து நடந்த பகுதியில் யானைகள் ரயில் பாதைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ரயில்வே வேலி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. உலக யானைகள் தினத்தன்றே தாய் யானையும் அதன் குட்டியும் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம், வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !