உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வன விலங்குகளுக்கு இடையூறு செய்தால் வழக்குப்பாயும் என எச்சரிக்கை | Disturbance to the elephant

வன விலங்குகளுக்கு இடையூறு செய்தால் வழக்குப்பாயும் என எச்சரிக்கை | Disturbance to the elephant

நீலகிரி மாவட்டம் முதுமலை மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா தேரோட்டம் திங்கள் இரவு நடைபெற்றது. விழாவில் பங்கேற்று விட்டு மசினகுடி சாலையில் பக்தர்கள் வாகனங்களில் சென்றனர். பொக்காபுரம் சாலையோரம் காட்டு யானை முகாமிட்டிருந்தது. பக்தர்கள் சிலர் யானை அருகே வாகனங்களை நிறுத்தி செல்பி எடுத்து இடையூறு செய்தனர். அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கூடலூர் எஸ்.ஐ. கபில்தேவ் மற்றும் போலீசார் பக்தர்களை எச்சரித்து அனுப்பினர். யானையை வனத்திற்குள் விரட்டினர். வன விலங்குகளுக்கு இடையூறு செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !