உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேட்டைக்காரசாமி கோயில் முள்படுக்கை திருவிழா

வேட்டைக்காரசாமி கோயில் முள்படுக்கை திருவிழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தல் மற்றும் ஆணிக்கால் செருப்புடன் பூசாரி நடந்து செல்லும் முள்படுக்கைத் திருவிழா நடைபெற்றது. விழாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவின் ஒரு பகுதியாக மகாலட்சுமி சுவாமி முன்பாக பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய்களை உடைத்து நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து பூசாரி வீரபத்திர சுவாமி முன்பாக கூர்மையான ஆணிகள் பதித்த மரக்கட்டை செருப்பு அணிந்து ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள்்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

மார் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !