உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க புதிய கண்காணிப்பு முறை | Elephant Control Room

வன விலங்குகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க புதிய கண்காணிப்பு முறை | Elephant Control Room

கோவை அருகே, மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ளது மதுக்கரை. மிகவும் ரம்மியமான சூழலில் அமைந்துள்ள மதுக்கரையில் காட்டு யானைகளுக்கு ரயில் பாதையினால் பாதிப்புகள் என்பது பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே உள்ளது. தமிழக-கேரள எல்லைகளுக்கிடையில் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஏ மற்றும் பி என்ற இரண்டு ரயில் பாதைகள் செல்கின்றன. இந்த ரயில் பாதைகள் தான் காட்டு யானைகளுக்கு பெரிய சவாலாக உள்ளன. ரயில் பாதையில் காட்டு யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரம் ரோந்து சென்று வருகிறார்கள். காட்டு யானைகளை பாதுகாக்கும் இந்த திட்டம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை