/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ யானைகளை காட்டுக்குள் விரட்டிய வனக் காவலர்கள் | On Pollachi Road 7 Wild Elephants Visit
யானைகளை காட்டுக்குள் விரட்டிய வனக் காவலர்கள் | On Pollachi Road 7 Wild Elephants Visit
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வால்பாறை - பொள்ளாச்சி சாலை ஐயர்பாடி எஸ்டேட் ஒட்டிய வனத்தில் இருந்து திடீரென 7 காட்டு யானைகள் சாலையில் ஹாயாக சென்றன. யானைகள் கூட்டமாக வருவதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வால்பாறை வனச்சரக காவலர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டினர். இச்சாலை வழியாக இரவில் வருவோர் கவனத்துடன் பயணிக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
மார் 18, 2024