உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள் | Wild elephants enterning the residential

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள் | Wild elephants enterning the residential

குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகள் | Wild elephants enterning the residential area | Cuddalore நீலகிரி மாவட்டம் கூடலூர், தொரப்பள்ளி, அள்ளூர்வயல், குணில், மண்வயல் பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. முதுமலையிலிருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு நுழைவதை தடுக்க முதுமலை வன எல்லையில் அகழி அமைக்கப்பட்டது. பராமரிப்பில்லாத அகழியை கடந்து குடியிருப்புக்குள் காட்டு யானைகள் முகாமிட்டு பயிர்களை நாசம் செய்து பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் கண்காணித்து விரட்டினாலும், யானைகள் ஊருக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில் இன்று இரண்டு ஆண் யானைகள் குணில் பகுதியில் நுழைந்து குடியிருப்பு மற்றும் விவசாயத் தோட்டங்களில் முகாமிட்டது. மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சமடைந்தனர். கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி, வன ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் இருந்து நகரவில்லை. பல மணி நேரப் போராட்டத்திற்கு பின் மாலை 4 மணிக்கு யானைகளை வனத்திற்குள் விரட்டினர். துார்ந்து போன அகழியை புனரமைத்து யானைகள் ஊருக்குள் புகாமல் வனத்துறை தடுக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என குடியிருப்புவாசிகள் எச்சரித்தனர்.

ஜூன் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை