உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விளைபொருளை விற்க இனி அலைய வேண்டாம்; விவசாயிகளுக்கு புதிய திட்டம்

விளைபொருளை விற்க இனி அலைய வேண்டாம்; விவசாயிகளுக்கு புதிய திட்டம்

விவசாயிகள் தங்கள் விளை பொருளை எங்கு விற்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அத்தகைய விவசாயிகளுக்கு உதவுவதற்காக இ நாம் என்ற தேசிய சந்தை வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருந்த இடத்தில் இருந்து விவசாயிகள் பொருட்களை விற்கலாம். இது தவிர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் விலை குறைவாக இருக்கும் காலத்தில் அவற்றை அரசு குடோனில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கான கடன் ரூ. 5 லட்சம் வரை 5 சதவீதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் 180 நாட்கள் வரை இங்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதற்குள் அவர்களின் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைத்தால் பொருளீட்டு கடன் செலுத்தி விட்டு பொருளை எடுத்துக் கொள்ளலாம். வியாபாரிகளும் இந்த கடனை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகளுக்கு உதவும் இத்தகைய திட்டங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ