மத்தியஇணைஅமைச்சர் எல்.முருகன்துவக்கிவைத்தார் |Coimbatore |Central MinisterofState L. Murugan
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்தார்| Coimbatore | Central Minister of State L. Murugan inaugurated கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இணைக்கக்கூடிய வகையில் ரயில் சேவையும், கேரளாவை இனைக்க ரயில் சேவையும் மேட்டுப்பாளையத்துக்கு வழங்க வேண்டும் என நீண்ட நாட்களாக மேட்டுப்பாளையம் மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரயி்ல்வே அமைச்சகம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாராந்திர ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து சேரும். அதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.20மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை சென்றடையும். மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. 2 அடுக்கு ஏசி ஒரு பெட்டியும், 3 அடுக்கு ஏசி 2 பெட்டி, 9 படுக்கை வசதிகள் கொன்ட பெட்டிகள், 4 அன்ரிசர்வேசன் பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக திண்டுக்கல்,பழனி, ஒட்டன்சத்திரம், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக இயக்கப்படும். இதே போல மேட்டுப்பாளையம் கோவை ரயில் தடத்தில் இயக்கப்படும் மெமோ ரயில் 3 முறை போத்தனூர் வரை செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.