ஆட்டோ ரிக்சாவில் அமெரிக்கர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
ஆட்டோ ரிக்சாவில் அமெரிக்கர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு | Environmental Awareness Campaingn in Auto | US group அமெரிக்காவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோஸ். இவர் ரிக்சா ரன் இந்தியா - தி அட்வென்சரிஸ்ட்ஸ் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் இரண்டு வாரங்களில் 2500 கிலோ மீட்டர் துாரம் ஆட்டோவில் பயணம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு செய்ய முடிவு செய்தார். இதன்படி 210 பேர் கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தலா 3 பேர் என 70 ஆட்டோக்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை கேரள மாநிலம் கொச்சியில் துவக்கினர். இக்குழுவினர் பல மாநிலங்கள் வழியாக சென்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் வரும் செப்டம்பர் 25 ம் தேதி விழிப்புணர்வு பிரச்சாரத்தை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். புவி வெப்பமடைதல், வன விலங்கு பாதுகாப்பு, பிளாஸ்டிக் தவிர்தல்; மரம் மற்றும் இயற்கையை வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்கிறார் ரிக்சா ரன் இந்தியா - தி அட்வென்சரிஸ்ட்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஜோஷ்.