தனியார் மரத்துாள் ஆலை முற்றுகை | environmental impact caused by sawdust company
தனியார் மரத்துாள் ஆலை முற்றுகை / environmental impact caused by sawdust company / palladam திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மரத்துகள்களை பயன்படுத்தி மாற்று உபயோகப்பொருள் தயாரிக்கும் ஆலை உள்ளது. இதிலிருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் மரத்துகள்கள் வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கண்களை பாதிக்கச் செய்கிறது. மரத்துகள்கள் படிந்து விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏறபடுத்தும் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆலையை முற்றுகையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக செயல்படும் ஆலைக்கு அனுமதி பெறப்பட்டதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. கரிதுகள்கள் மற்றும் மரத் துகள்கள், விளை நிலங்கள், பயிர்களில் படிந்து பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. கால்நடைகளும் இவற்றால் நோய்வாய்ப்படுகின்றன. கழிவுகளை நீர்வழிப் பாதையில் கொட்டி மூடி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளித்தும் பயனில்லை. நிறுவனத்தை உடனே மூட வேண்டும் என கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். நிறுவனத்தை முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் ஊராட்சி செயலர் கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். முற்றுகையிட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.