/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கரும்பில் புரட்சி: எத்தனால் உற்பத்திக்கு புதிய திருப்பம்! Sugarcane | Ethanol
கரும்பில் புரட்சி: எத்தனால் உற்பத்திக்கு புதிய திருப்பம்! Sugarcane | Ethanol
மத்திய அரசின் புதிய கொள்கை பெட்ரோலில் எத்தனால் கலப்பது தான். எத்தனால் கரும்பு சக்கை மற்றும் கரும்பு சாறிலிருந்து எடுக்கப்படுகிறது. கோவையில் உள்ள கரும்பு இனபெருக்க நிறுவனம் கண்டுபிடித்த 0238 என்ற ரக கரும்பு விளைச்சலால் இந்தியாவின் மொத்த தேவையை விட அதிக சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. அதனால் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட 4 மில்லியன் டன் சர்க்கரையிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர குறைந்த மாதங்களில் முதிர்வடையும் கரும்பு ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் விகிதம் அதிகரிக்கப்பட்டு வருவதால் எத்தனால் உற்பத்தியில் கரும்பு வகிக்கும் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 18, 2024