உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / எவரெஸ்ட் சிகரத்தில் மராத்தான் ஓடி சாதனை புரிந்த வீராங்கனை

எவரெஸ்ட் சிகரத்தில் மராத்தான் ஓடி சாதனை புரிந்த வீராங்கனை

மலைப்பிரதேசங்களில் மராத்தான் ஓடும் போட்டிகளில் உலகம் முழுவதும் 6 லட்சம் பேர் தான் கலந்து கொள்கிறார்கள். இது ஒரு கடுமையான போட்டி. ஏனென்றால் மலைகளில் ஆக்சிஜன் குறைவு. குறைவான ஆக்சிஜன் உள்ள மலைகளில் நிற்காமல் தொடர்ந்து ஓடும் மராத்தான் ஓட்டம் சவாலானது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருந்து இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு என்கிறார், தீவிர துார தடகள வீராங்கனையான நவ் ஷீன் பானு சாந்த். இவர் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் மராத்தான் ஓடி சாதனை புரிந்தார். இந்த சாதனையை புரிந்த முதல் தென்னிந்திய பெண் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர துார தடகள போட்டி என்ற மலைகளில் மராத்தான் ஓடும் வீராங்கனை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !