குப்பையில் வீசப்படும் டி.வி.யில் இத்தனை நச்சுப்பொருட்களா? Electronics Waste | Coimbatore
கோவை மாநகரில் தினமும் இ-வேஸ்ட் என்ற மின் மற்றும் மின்னணு கழிவுகள் அதிக அளவில் சேகரமாகின்றன. அவற்றை மறுசுழற்சி செய்வதற்காக மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு ஏற்படுத்தும் தீமைகளை விட மின் மற்றும் மின்னணு கழிவுகள் ஏற்படுத்தும் தீமைகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த கழிவில் ஆபத்து விளைவிக்கும் உலோகங்களும் உள்ளன. இந்த கழிவை சரியான முறையில் அப்புறப்படுத்தவில்லையென்றால் மனிதர்களுக்கும், பூமிக்கும் பல கெடுதல்களை ஏற்படுத்தி விடும். நாம் தினந்தோறும் பயன்படுத்தும் பல மின்னணு பொருட்களில் நம்பவே முடியாத அளவுக்கு நச்சுப் பொருட்கள் மறைந்துள்ளன. உதாரணத்துக்கு நாம் குப்பையில் துாக்கி வீசும் டி.வி. கழிவில் நம்ப முடியாத நச்சுப்பொருட்கள் மறைந்திருப்பது குறித்தும், மின்னணு கழிவை நாம் ஏன் முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.