உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உடுமலை வன அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்

உடுமலை வன அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்

உடுமலை வன அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் / farmers grievance meeting / udumalpet forest office திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் திருப்பூர் வனக்கோட்டம் சார்பில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. புலிகள் காப்பக வன அலுவலர் ராஜேஷ் தலைமை வகித்தார். இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் சிலர் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டு தோறும் வனப்பரப்பு குறைந்து வருவதால் வனவிலங்குகள், சமவெளிப்பகுதிக்கு வந்து அதிக சேதம் ஏற்படுத்துகின்றன. குழிப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் வசிப்பவர்களுக்கு தமிழக அரசு நில உரிமை பட்டா வழங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 800 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ள பட்டா வழங்கியதில் 2 ஆயிரம் ஏக்கர் வரை வனப்பரப்பு அழிக்கப்பட்டு விளைநிலமாக மக்கள் மாற்றியுள்ளனர். மலைத்தொடர்களுக்கு இடையே உள்ள பகுதியில் வனம் அழிக்கப்பட்டு விவசாய சாகுபடி மேற்கொள்கின்றனர். இதனால், வனவிலங்குகள் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்து, விளைநிலங்களில் கடும் சேதம் ஏற்படுத்துகின்றன. தொடர்ந்து நில உரிமை பட்டா வழங்குவதால் வனப்பரப்பு சுருங்கி வனமே முற்றிலுமாக அழியும் நிலை உருவாகும். எனவே, வனத்துறை அதிகாரிகள் வனப்பரப்பு குறைந்துள்ளது குறித்து முறையாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வன உரிமை பட்டா வழங்கும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். புதிதாக

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ