உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து கோஷம் | farmers petition with banana plants | pollachi

இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து கோஷம் | farmers petition with banana plants | pollachi

பொள்ளாச்சி ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சுமார் ஒரு லட்சம் வாழைகள் முறிந்து சேதமடைந்தன. அப்பகுதியை ஆய்வு செய்த மினிஸ்டர் முத்துசாமி விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் இழப்பீடு வழங்காததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இழப்பீடு வழங்கக்கோரி வாழைக்கன்றுடன் பொள்ளாச்சி சப் கலெக்டர் ஆபிஸை விவசாயிகள் முற்றுகையிட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் சப் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

நவ 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை