பாஸ்டேக் அப்டேட் செய்யாவிட்டால் பணம் பறிபோய்விடும்
நெடுஞ்சாலைகளில், சுங்க கட்டண வசூல் மையங்களில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த புதிய முறை கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், பாஸ்டேக் வாங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களில் பல குளறுபடிகள் இருப்பதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிதாக தகவல்கள் கொடுக்க மத்திய அரசு வற்புறுத்துகிறது. இதன் மூலம் பாஸ்டேக்கை அப்டேட் செய்யவில்லையென்றால், அதில் உள்ள பணமும் காணாமல் போய்விடும். இப்படி பாஸ்டேக் பற்றிய அப்டேட் தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 23, 2024