ஃபைன் கோல்டு நகைக்கடை நடிகை ரம்யா நம்பீசன் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், மஞ்சூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய இடங்களில் ஃபைன் கோல்டு நகைக்கடை செயல்பட்டு வருகிறது. பந்தலூரில் நகைக்கடையின் பத்தாம் ஆண்டை முன்னிட்டு கடை புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. பொது மேலாளர் முத்துக்குமார் வரவேற்றார். உரிமையாளர்கள் பினோய், ஷாஜன் ஜார்ஜ் தலைமை வகித்தனர். நகைக்கடையை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்கக் காயின் வழங்கப்பட்டது. விழாவில் வியாபாரிகள் சங்கத் தலைவர் அஷ்ரப், நகராட்சி தலைவர் சிவகாமி, தி.மு.க. நகரச் செயலாளர் சேகர், அ.தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, காங்கிரஸ் நகர தலைவர் ஷாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிப் 13, 2025