உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / உயரமான கட்டடங்களில் தீ... வந்து விட்டது ஸ்கை லிப்ட்

உயரமான கட்டடங்களில் தீ... வந்து விட்டது ஸ்கை லிப்ட்

கோவையில் அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், என கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அதில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவதற்கும், அங்கு பிடித்த தீயை அணைப்பதற்கும் தீயணைப்பு வாகனங்கள் இல்லாத நிலை இருந்தது. இத்தகைய பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு புதிதாக வான் நோக்கி நகரும் ஸ்கை லிப்ட் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் தயாரான பிராண்டோ ஸ்கை லிப்ட் வாகனம் வாயிலாக 54 மீட்டர் உயரமான கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க முடியும். அதில் சிக்கியுள்ளவர்களையும் மீட்க முடியும். இந்த ஸ்கை லிப்ட் வாகனம் செயல்படும் விதம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை