தென்செரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் பங்கேற்பு
தென்செரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் பங்கேற்பு / first year completion ceremony of matheswaran temple / palladam பல்லடம் அடுத்த பனிக்கம்பட்டி ஊராட்சி வேலப்பகவுண்டம்பாளையம் கிராமத்தில் மாதேஸ்வரன் கோயில் உள்ளது. இதன் முதலாம் ஆண்டு நிறைவு விழா வழிபாடுகள் நடைபெற்றன. தென்செரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்தார். பேரூர், பச்சாபாளையம் சாந்தலிங்க அருட்பணி மன்றத்தை சேர்ந்த பூபதி மற்றும் குழுவினர் வேள்வி வழிபாட்டை நடத்தினர். சிறப்பு அலங்காரத்தில் மூலவர் மாதேஸ்வரன் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
மார் 09, 2025