/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சிறுதானியங்களின் பயனைப் பட்டியலிட்ட மாணவர்கள்! |Coimbatore |Traditional Food Festival
சிறுதானியங்களின் பயனைப் பட்டியலிட்ட மாணவர்கள்! |Coimbatore |Traditional Food Festival
டைட்டில்: சிறுதானியங்களின் பயனைப் பட்டியலிட்ட மாணவர்கள்! |Coimbatore |Traditional Food Festival கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 8-வது ஆண்டு பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. மாணவர்களிடையே ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாரம்பரிய உணவு முறைகளை ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், ராகி பீட்சா, கம்பு நூடுல்ஸ், நவதானிய பரோட்டா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அக் 14, 2026