கோவை அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி ஏற்பாடு | Football Match
கோவை அத்யாயனா சர்வதேச பப்ளிக் பள்ளி சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட கால்பந்து போட்டி பள்ளி மைதானத்தில் துவங்கியது. போட்டியை பள்ளி தாளாளர் ஆனந்த் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். இப்போட்டிகள் 9, 11, 13 மற்றும் 15 வயது பிரிவினருக்கு இடையே நடக்கிறது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 130 அணிகள் பங்கேற்றன. 9 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் அத்யாயனா பள்ளி 1 - 0 என்ற கோல் கணக்கில் இந்துஸ்தான் பள்ளி அணியை வென்றது. 11 வயது பிரிவில் அத்யாயனா பள்ளி 4 - 0 என்ற கோல் கணக்கில் தாமரை வேர்ல்டு பள்ளி அணியை வென்றது. 13 வயது பிரிவில் ஜி.ஆர்.டி. பப்ளிக் பள்ளி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் சி.எஸ். அகாடமி அணியை வென்றது. 15 வயது பிரிவில் ராகவேந்திரா பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் சின்மயா மெட்ரிக் பள்ளியை அணியை வென்றது. இப்போட்டிகள் நாளை நிறைவடைகிறது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்.