உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட 30 பள்ளிகள் பங்கேற்பு | Coimbatore | Football match

கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட 30 பள்ளிகள் பங்கேற்பு | Coimbatore | Football match

பள்ளிக்கல்வித்துறையின் குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையில் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. கிழக்கு குறு மையத்துக்கு உட்பட்ட விளையாட்டு போட்டிகள் கே.கே நாயுடு மேல்நிலைப்பள்ளி சார்பில், நடைபெறுகிறது. மாணவ மாணவியருக்கான குழு விளையாட்டு போட்டிகள் சி.ஐ.டி கல்லுாரி மைதானத்தில் நடக்கின்றன. கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட 30 பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 19 வயது பிரிவு மாணவர்கள் கால்பந்து போட்டியில், நேஷனல் மாடல் பள்ளி அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் பெர்க்ஸ் பள்ளி அணியையும், கோபால் நாயுடு பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியையும், தர்மசாஸ்தா பள்ளி அணி 5 -1 என்ற கோல் கணக்கில் ஆர்.ஜே மெட்ரிக் பள்ளியையும் வீழ்த்தின. 17 வயது பிரிவில் தர்மசாஸ்தா பள்ளி அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் கே.கே நாயுடு பள்ளியையும், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கோபால் நாயுடு பள்ளியையும் வீழ்த்தின.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை