உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்றி வாகை சூடிய போஸ்கோ அணி | Coimbatore

வெற்றி வாகை சூடிய போஸ்கோ அணி | Coimbatore

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19 வது வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான பாரதியார் தின கால்பந்து போட்டி கோவை பாரதியார் பல்கலை மைதானத்தில் நடைபெற்றது. 38 அணிகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் சென்னை டான் போஸ்கோ மற்றும் கோவை ராகவேந்திரா பள்ளி அணிகள் விளையாடின. இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகவேந்திரா அணியினர் கிடைத்த சில வாய்ப்புகளை தவற விட்டனர். போஸ்கோ அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. கோவை ராகவேந்திர அணி இரண்டாமிடம் பிடித்தது. மூன்றாமிடத்துக்கான போட்டியில் திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் நீலகிரி செயின்ட் ஜோசப் அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், நீலகிரி உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி, மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் தேவஸ்தான பள்ளி தலைமையாசிரியை செல்வகுமாரி, மூத்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேம்ஸ், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.

ஜன 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ