மலைவழிப் பாதையில் வாகனங்கள் எச்சரிக்கையாக செல்ல வலியுறுத்தல் |Forest department in conservation
மலைவழிப் பாதையில் வாகனங்கள் எச்சரிக்கையாக செல்ல வலியுறுத்தல் | Forest department in conservation work நீலகிரி மாவட்டம் பந்தலூரில் இருந்து கேரளா மாநிலம் கோழிக்கோடு செல்லும் நெடுஞ்சாலையில் சேரம்பாடி அருகே காபிகாடு என்ற இடத்தில் சாலையோர புதரில் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் முகமிட்டுள்ளன. இந்தப் பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் இருப்பதால் இதே பகுதியில் யானைகள் முகாமிட்டு, உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறது. யானைகள் திடீரென சாலைக்கு வந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்தப் பகுதியில் சேரம்பாடி வனத்துறையினர் முகாமிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் வாகனங்களை நிறுத்தி யானைகளை பார்ப்பதற்காக இறங்கக்கூடாது. யானைகளை வீடியோ மற்றும் போட்டோ எடுக்கக் கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்பகுதி மக்கள், மாணவர்கள் வனத்துறை பாதுகாப்புடன் சாலையை கடந்து செல்கின்றனர்.