நான்கு நாள் தொடர் கிரிக்கெட் போட்டி | Cricket tornament
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட கூச் பெஹர் டிராபி கிரிக்கெட் நான்கு நாள் தொடரின் காலுறுதிப் போட்டிகள் ஹூப்ளி, பாட்டியாலா, வயநாடு மற்றும் கோவை ஆகிய நான்கு இடங்களில் நடக்கிறது. கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கும் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் பங்கேற்றன. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அணிக்கு சாஹில் பராக் 77 ரன்கள், அனிருதா 30 ரன்கள் எடுத்து நல்லதொரு துவக்கம் அமைத்து கொடுத்தனர்.
ஜன 01, 2024