/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 6 மாணவர்கள் மற்றும் சப்ளையர் கைது | ganja smuggling students arrest | Kovai
6 மாணவர்கள் மற்றும் சப்ளையர் கைது | ganja smuggling students arrest | Kovai
கோவை செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலம் போடும் பிளாஸ்டிக் கவர்கள் இருந்தது. விசாரணையில் அங்கிருந்த 6 கல்லூரி மாணவர்கள் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை போதை ஆசாமிகளுக்கு டோர் டெலிவரி செய்தது உறுதியானது. இதில் 6 மாணவர்கள் மற்றும் கஞ்சா சப்ளையர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு குறித்து ஆய்வு செய்கின்றனர்.
நவ 11, 2024